நோலனின் ஓப்பன்ஹெய்மர் vs ஸ்கார்சேசியின் கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன் –ஆஸ்கரில் ஆதிக்கம் செலுத்தும் படங்கள்

vinoth
புதன், 24 ஜனவரி 2024 (07:18 IST)
ஆண்டுதோறும் அமெரிக்காவின் உயர்ந்த திரைப்பட விருதுகளாக ஆஸ்கர் விருதுகள் பிப்ரவரி மாதத்தில் வழங்கப்படுகின்றன.  இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி லாஸ் ஏஞ்சலஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடக்க உள்ளது. இந்த நிகழ்வை ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிலையில் 96 ஆவது ஆஸ்கர் விருதுகள் நிகழ்வுகளுக்கு இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ள படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஓப்பன்ஹெய்மர், கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன், பார்பி, பாஸ்ட் லைவ்ஸ் ஆகிய படங்கள் அதிக பிரிவுகளில் தேர்வாகியுள்ளன.

ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டௌனி ஜூனியர் உள்ளிட்ட பலர் நடித்து ஜூலை 21 ஆம் தேதி வெளியான படம் ஓப்பன்ஹெய்மர். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளை கண்டுபிடிக்க காரணகர்த்தாவான விஞ்ஞானி அனுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பென்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாக உருவாகி இருந்தது இந்த திரைப்படம்.

ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் 13 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என பல பிரிவுகளில் இந்த ஆண்டு அதிக பிரிவுகளில் தேர்வாகியுள்ள படமாக ஓப்பன்ஹெய்மர் இடம்பெற்றுள்ளது.

அதற்கடுத்த இடங்களில் யோர்காஸ் லான்திமோஸ் இயக்கியுள்ள புவர் திங்ஸ் 11 பிரிவுகளிலும்,  மார்ட்டின் ஸ்கார்சேஸே இயக்கியுள்ள கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன் 10 பிரிவுகளிலும்,  க்ரெட்டா ஜெர்விக் இயக்கியுள்ள பார்பி திரைப்படம் 8 பிரிவுகளிலும் தேர்வாகியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்