ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் தேர்வாகியுள்ள 'ஓப்பன்ஹெய்மர்'

Sinoj

செவ்வாய், 23 ஜனவரி 2024 (20:39 IST)
ஹாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். இவரது ஒவ்வொரு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெறும்.

அந்த வகையில், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானில் குண்டுபோடுவதற்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் இயற்பியல் விஞ்ஞானி ராபர்ட் ஓபன்ஹெய்மர் மற்றும் குழுவினர் முதல் அணுகுண்டை வெடிக்க செய்தனர்.

அந்த ஓபன்ஹெய்மர் அணு ஆயுத சோதனை குறித்த அரசியல் பார்வையுடன் கூடிய படமாக இதை கிறிஸ்டோபர் நோலன்  இப்படத்தை உருவாகியிருந்தார். இப்படத்தில் சிலியன் முர்ஃபி ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த படம் ஜூலை 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூல் குவித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இந்தாண்டிற்கான ஆஸ்கர் விருது  பட்டியலில் அதிக பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் படம் தேர்வாகி, ஆஸ்கர் விருது பட்டியலில் அதிக பிரிவுகளில் தேர்வான படங்களில் முதலிடம் பிடித்துள்ளது.

இப்படம் சிறந்த திறந்த படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 13 பிரிவுகளில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்