வாரத்துக்கு 3 படங்கள் மட்டுமே ரிலீஸ் : தயாரிப்பாளர் சங்கம் முடிவு

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (15:29 IST)
வாரத்துக்கு 3 படங்களை மட்டுமே ரிலீஸ் செய்யத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு  பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. எனவே, விரைவில் படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.
 
பொதுவாக, வருடத்துக்கு 200 படங்களுக்கும் மேல் தமிழில் ரிலீஸாகின்றன. இதனால், வாரம் ஏழெட்டுப் படங்களாவது ரிலீஸாக வேண்டியுள்ளது. எனவே, வசூல் குறைவதோடு, பெரிய படங்களுடன் ரிலீஸாகும் சின்ன படங்கள் காணாமல் போய்விடுகின்றன. எனவே, முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது  தயாரிப்பாளர்கள் சங்கம்.
அதன்படி, இனிமேல் வாரத்துக்கு 3 படங்கள் மட்டுமே ரிலீஸாகும். இதில், எந்தவிதமான சமரசமும் செய்யப் போவதில்லை என்று திட்டவட்டமாக இருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்