''உன்னதமான ரசிகர்களில் ஒருவர் சித்தார்த்- கமல்ஹாசன் பாராட்டு

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (19:35 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சித்தார்த். இவர், கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.

இந்த  நிலையில்,  பண்ணையாரும் பத்மினிரும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சித்தா. இப்படத்தில் சித்தார்த் தயாரித்து நடித்துள்ளார்.

இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார். இது, அண்ணன் மகளுக்கும் ஹீரோவுக்குமான அன்புருவான கதை. இப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
 

இப்படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, ‘’வித்யாசமான படங்கள் பார்க்க வேண்டும் எடுக்க வேண்டும் என்ற  உன்னதமான ரசிகர்களில் ஒருவர் சித்தார்த்.

சினிமாவை நற்திசை நோக்கி நகர்த்தும் கலைஞர்களில் சித்தார்த் முக்கியமானவர். இப்படத்தில் சித்தப்பாவின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை சித்தா படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்… இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்லார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்