சூப்பர் ஸ்டார் மகனுக்கு ஜோடி..பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய்பல்லவி

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (18:45 IST)
மலையாள சினிமாவின் முன்னணி நடிகை சாய்பல்லவி. இவர், கடத 2005 ஆம் ஆண்டில் பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரி மான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன்பின்னர், பிரேமம் என்ற படத்தில் டீச்சர் வேடத்தில் நடித்தார். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

அதன்பின்னர்,மாரி 2, என்ஜிகே, கார்கி, பாடி பாடி லீஸ் மனசு  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி, பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

அதாவது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் மகன் ஜூனைத் கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் சாய்பல்லவி. காதல் ஜார்னரில் உருவாகவுள்ள இப்படத்தை சுனில் பாண்டே இயக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்