மீண்டும் தள்ளிப்போகும் கமல்ஹாசனின் இந்தியன் 2! எப்போதுதான் ரிலீஸ்?

திங்கள், 11 செப்டம்பர் 2023 (07:54 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் இயக்கும் படத்திலும் பிஸியாக இருப்பதால் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகளை எல்லாம் தன்னுடைய முன்னாள் உதவி இயக்குனர்களான அறிவழகன், வசந்தபாலன் உள்ளிட்டவர்களை வைத்து படமாக்கி வந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அடுத்த ஆண்டு பின்பகுதியில் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டுதான் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்