தனுஷுடன் எந்த பிரச்சனையும் இல்லை: விஜய் சேதுபதி

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (17:26 IST)
வடசென்னை படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி தரப்பில் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர்.


 

 
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வடசென்னை. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லான நடிப்பதாக முதலில் செய்தி வந்தது. தற்போது அவர் படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகினது.
 
இதுகுறித்து விஜய் தரப்பில் கூறியதாவது:-
 
படப்பிடிப்பு ஏதோ காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது. ஷூட்டிங்காக நான் கொடுத்த கால் ஷீட்கள் தொடர்ந்து வீணாகியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நடிக்க வேண்டிய பல படங்களுக்கு கால் ஷீட் ஒதுக்கப்பட்டுள்ளது. தனுஷுடன் எந்த பிரச்சனையும் இல்லை. படக்குழுவுடன் சுமூகமாக பேசிதான் படத்திலிருந்து விலகியது, என்றனர்.
அடுத்த கட்டுரையில்