பழம்பெரும் சினிமா நிறுவனமான விஜயா புரொடக்சன் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்தபடத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்களை விஜயா புரொடக்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் படி புரொடக்சன் நம்பர் 6 என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, ராசிகண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி, நாசர், ஸ்ரீமான், மொட்டை ராஜேந்திரன், உள்பட பலர் நடிக்கின்றனர். வேல்ராஜ் இயக்குகிறார். சண்டை காட்சிகள் அனல் அரசு, ஆர்ட் பிரபாகரன், ஆகியோர் மேற்கொள்ள உள்ளனர்.