வெறித்தனம் ஓவர் லோடட்!!! சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர் ரிலீஸ்

வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (17:25 IST)
ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடித்துள்ளார். 
 
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
 
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. படம் வருகிற மார்ச் 29 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெறித்தனமான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதோ அந்த டிரெய்லர் உங்கள் பார்வைக்கு... 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்