“மாமனிதன்” படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த படத்தை சீனு இராமசாமி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துவந்தார் படம் கிட்டத்தட்ட முழுவதும் முடியும் நிலையில் உள்ளது. இநிலையில்படம் தொடங்கியதில் இருந்து இயக்குனர் தொடங்கி நடிகர் நடிகை தொடங்கி படத்தில் வேலை செய்யும் கடைசி கட்ட ஊழியர்கள் வரை இதுவரை யாருக்கும் சம்பளம் தரவில்லையாம்
யுவன் சங்கர் ராஜாவை நம்பி, படக்குழுவினர் அனைவரும் உழைத்து வந்தனர் தற்போது படம் முடிந்து விட்ட நிலையில் சம்பளம் குறித்து யார் போன் பண்ணாலும் யுவன் எடுப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.