விஜய் படத்துக்காக என்னை அப்ரோச் செய்தார்கள் - நிவேதா பெத்துராஜ்

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (17:43 IST)
‘விஜய் படத்துக்காக என்னை அப்ரோச் செய்தார்கள்’ என நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.


 
‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே...’ பாடல், அனைவருக்கும் பேவரிட்டான பாடலாக அமைந்தது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் நடித்தார்.
 
தற்போது ஜெயம் ரவி ஜோடியாக ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துள்ளார். நிவேதாவுக்கு, விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ட்விட்டரில் கூட இதை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அப்போது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சிஇஓவான ஹேமா ருக்மணி, ‘விரைவில் உன் ஆசை நிறைவேறும்’ என்று தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு இணையதளத்துக்குப் பேட்டி அளித்த நிவேதா பெத்துராஜ், ‘பைரவா’ படத்தில் நடிக்க தன்னை அப்ரோச் செய்ததாகவும், ஆனால் தான் நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், என்ன காரணத்துக்காக தான் நடிக்கவில்லை என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்