அம்மாடி... ஒரு படத்துக்காக 10 நாட்கள் டப்பிங் பேசிய விக்ரம்

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (17:26 IST)
தான் நடித்துள்ள ‘ஸ்கெட்ச்’ படத்துக்காக, 10 நாட்கள் டப்பிங் பேசியிருக்கிறார் விக்ரம்.
             ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர், அடுத்ததாக இயக்கியுள்ள படம்‘ஸ்கெட்ச்’.விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடிக்க, காமெடியனாக சூரி நடித்துள்ளார்.
 
         வடசென்னையில் வசிக்கும் மெக்கானிக்காக இந்தப் படத்தில் நடித்துள்ளார் விக்ரம். எனவே, வடசென்னைத் தமிழில் பேசி நடித்திருக்கும் விக்ரம், இந்தப் படத்துக்காக 10 நாட்கள் டப்பிங் பேசியிருக்கிறாராம். குரலை சற்று வித்தியாசப்படுத்தி பேசுவதற்காக இவ்வளவு நாட்கள் ஆனதாம். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்