பிரபல சீரியல் நடிகையின் காதலன் தீக்குளித்து மரணம்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (10:57 IST)
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். நிலானி, காந்தி லலித்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் மயிலாப்பூரில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்று இருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய காதலர் காந்தி லலித்குமார், நிலானியிடம் திருமணம் குறித்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்டாராம்.
 
இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் போலீஸிடம், காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதற்கிடையில் நடிகை நிலானியிடம் தகராறில் ஈடுபட்ட அவரது காதலன் காந்தி லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
 
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்