பிக்பாஸ் 2: இந்த வார எவிக்சன் பட்டியலில் சிக்கியவர்கள் யார் யார்?

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (09:18 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை எவிக்சன் பிராசஸ் என்ற ஒன்று நடைபெறும். இதில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை எவிக்சன் பட்டியலில் சேர்ப்பார்கள். ஆனால் இந்த வாரம் ஜனனி தவிர மற்ற ஐவருமே எவிக்சன் பட்டியலில் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். ஜனனி ஏற்கனவே ஃபைனலுக்கு தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஐஸ்வர்யா, யாஷிகா, விஜயலட்சுமி, பாலாஜி மற்றும் ரித்விகா ஆகிய ஐவரில் இருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு மீதியுள்ள மூவரும் ஜனனியும் ஃபைனலுக்கு செல்வார்கள். எனவே இந்த வாரம் ஓட்டுப்பதிவு என்பது மிக முக்கியமானது.

அதேபோல் இந்த வார டாஸ்க்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தனித்தனியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார டாஸ்க்குகள் கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்பதால் பாலாஜி மட்டும் டாஸ்க்கை நிறைவேற்ற சிரமம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்