தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில், உருவாகி வரும் பத்து தல படத்தின் அப்டேட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்து தல. இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இசையமைக்கிறார். கன்னா படத்தின் ரீமேக் ஆகும், ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் நம்ம சத்தம் ரிலிஸாகி வைரலாது.
இந்த நிலையில், வரும் மார்ச் 3 ஆம் தேதி இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று படக்குழு இன்று அறிவித்துள்ளது.
இப்படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
A Huge SURPRISE coming your way from #PathuThala on 03.03.23