அதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஸ்ரீ அனுசுயா மணிப்பூர் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுனராக இருந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நாகலாந்து ஆளுனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜார்கண்ட் மாநில ஆளுனராக பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோரை தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் மத்திய அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.