தளபதி விஜய்யின் மாஸ்டர் பட ரிலீஸ் பற்றிய புது தகவல்...

Webdunia
திங்கள், 11 மே 2020 (23:10 IST)
மெட்ரோ ரெயிலில் ’மாஸ்டர் ’பட ஹூட்டிங்.. விஜய்யின் முதல் அனுபவம் !

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது.  

இந்நிலையில், இப்படத்தின் வியாபாரம் ரூ.200 கோடிக்கும் தமிழக உரிமம்ரூ. 70 கோடிக்கும், வெளிநாட்டு உரிமம் ரூ. 30 கோடிக்கும்  பிற மாநிலங்களின் உரிமம் ரூ. 25 கோடிக்கு ஆகியுள்ளதாக தகவல் வெளியாகிறது. ஆனால் வெளிநாட்டில் கொரோனா பீதி காரணமாக இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய அதே நிறுவனம் திருப்பிக் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில்  மாஸ்டர் படத்தை OTT-யில் வெளியிட படக்குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது. அதனால் ஒட்டுமொத்த திரையுலகினர் இதைக் கூர்ந்து கவனித்தனர். ஆனால் இதுபோல் ரிலிஸ் செய்வதில்லை எனவும் தியேட்டரில் ரிலீஸ் செய்யவே விருப்பம் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக படம் வெளியாகவில்லை. இந்நிலையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீஸ் இன்னும் தள்ளிப்போய் உள்ளது. எனவே படம் மே 3-க்கு பிறகே வெளியாகும் என தெரிகிறது.  

விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படம் எப்போது வந்தாலும் அதை வெற்றி பெற வைக்க தளபதி ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்