பார்த்தவை மறந்து போகலாம்… நெற்றிக்கண் பாடல் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (16:28 IST)
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் ஆகஸ்ட் 13 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலிஸாக உள்ளது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த படம் ஆகஸ்டு 13 அன்று வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இரண்டாவது சிங்கிள் பாடல் இப்போது வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள பார்த்தவை மறந்து போகலாம் என்று தொடங்கும் அந்த பாடல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்