இன்று வெளியாகிறது நயன்தாராவின் நெற்றிக்கண் ட்ரெய்லர்! – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (10:32 IST)
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான நெற்றிக்கண் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் முழுவதும் தயாராகி ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் படத்தை வெளியிடுவதில் இழுபறி நீடித்த நிலையில் நெற்றிக்கண் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் ட்ரெய்லர் இன்று காலை 12.15 மணியளவில் வெளியிடப்பட உள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்