கடும் போட்டி எதிரொலி.. கட்டணத்தை குறைத்த நெட்பிளிக்ஸ் நிறுவனம்..!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (18:29 IST)
ஓடிடி நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டதை அடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் கட்டணத்தை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியிலும் வெளியாகி விடுகின்றன என்பதால் ஓடிடி சந்தாதாரர்களின் எண்ணிக்கை கலந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானது அடுத்து புதிய சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓடிடி நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவில் உள்ளதை அடுத்து நிறுவனங்கள் கட்டணங்களையும் குறைத்து வருகின்றன என்பதும் சில சலுகைகளையும் அறிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது சந்தாதாரங்களுக்கு கட்டணத்தை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் ஐரோப்பா லத்தின் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள ஒரு சில நாடுகளிலும் கட்டண குறைப்பை அறிமுகம் செய்துள்ளது. 
 
விலை குறைப்பு மட்டுமின்றி 12 நாடுகளில் குறைந்த விலை சந்தா திட்டங்களையும் நெட்பிளிக்ஸ் அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்