கொறச்சு வேனாலும் கொடுங்க ஆனா மொத்தமா குடுங்க- சந்தானத்தின் சம்பள பாலிசி இதுதானாம்!

வியாழன், 23 பிப்ரவரி 2023 (15:39 IST)
நடிகர் சந்தானம் தொடர்ந்து கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். ஆனால் படங்கள் பெரியளவில் வெற்றிபெறுவதில்லை. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற கவுண்டமணியின் பிரபலமான ஜோக் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டிக்கிலோனா படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்க இருக்கும் நிலையில் சீன் ரோல்டன் இசையமைக்க உள்ளார்.  படத்துக்கு ஒளிப்பதிவாளராக விட்னஸ் படத்தின் இயக்குனர் தீபக் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், விட்னஸ் படத்தைத் தயாரித்த பீப்பிள்ஸ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தொடர் தோல்விகளால் கையில் அதிக படம் இல்லாத சந்தானம், இப்போது தன்னுடைய சம்பளத்தைக் கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சம்பளத்தை ஒரே தொகையாக மொத்தமாகக் கொடுக்கும் நிறுவனத்துக்குதான் தேதிகள் உடனடியாக தரமுடியும் என்ற நிபந்தனையை விதிக்கிறாராம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்