அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதனால் படம் மார்ச் மாதத்துக்கு தள்ளிப் போகும் என சொல்லப்பட்டது. ஆனால் ஏற்கனவே பல மாதங்களாக இந்த படத்தின் தாமதம் ஆகிக்கொண்டே வந்ததால் படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் அழுத்தம் கொடுத்ததால்தான் கதை உரிமைக்காக பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் வைத்த நிபந்தனைகளை எல்லாம் ஒத்துக்கொண்டு பிப்ரவரி 6 ஆம் தேதியே ரிலீஸ் என்று அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.