தல வந்தா தள்ளி போயிதான ஆகணும்..! ட்ராகன் ரிலீஸை ஒத்திவைத்த ப்ரதீப் ரங்கநாதன்!

Prasanth Karthick

ஞாயிறு, 19 ஜனவரி 2025 (15:17 IST)

பிப்ரவரி 6ம் தேதி ‘விடாமுயற்சி’ ரிலீஸை அறிவித்துள்ள நிலையில், ப்ரதீப் ரங்கநாதனின் ட்ராகன் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் விடாமுயற்சி. அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விடாமுயற்சி முன்னதாக பொங்கலுக்கே வெளியாவதாக இருந்த நிலையில் சில சூழல்கள் காரணமாக படம் பொங்கலுக்கு வெளியாகாது என லைகா நிறுவனம் புத்தாண்டில் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது.

 

அதன் பின்னர் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே பிப்ரவரி 6ம் தேதி பட ரிலீஸையும் அறிவித்துள்ளனர். இதனால் பிப்ரவரி முதல் வாரத்தில் ரிலீஸாக திட்டமிடப்பட்டிருந்த படங்கள் தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 6ம் தேதி ப்ரதீப் ரங்கநாதனின் ட்ராகன் படம் வெளியாக இருந்த நிலையில் அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ப்ரதீப் ரங்கநாதன் “தல வந்த தள்ளி போயிதான ஆகணும். ட்ராகன் பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸாகும்” என தெரிவித்துள்ளார். 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்