துபாயை அடுத்து ஐரோப்பிய கார் பந்தயத்திலும் அஜித் சாதனை.. முதல் சுற்றில் வெற்றி..!

Siva

திங்கள், 20 ஜனவரி 2025 (08:09 IST)
சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டியில் அஜித்தின் அணி மூன்றாவதாக வந்தது என்பதும் இதனால் இந்தியாவுக்கே பெருமை கிடைத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அஜித் போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறும் பெருக்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடரில் கலந்து கொண்டு வரும் நிலையில் அவர் முதல் சுற்றில் தகுதி பெற்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் கார் ரேஸ் போட்டியில் அஜித் உள்பட பல கார் ரேஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

முதல் சுற்றில் 4.653 கிலோமீட்டர் தொலைவில் பந்தயம் சுற்றை 1:49:13 லேப் டைமில் நிறைவு செய்த அஜித் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு முன்னர் அவர் ஐந்து முறை பயிற்சி சுற்றில் கலந்து கொண்டதாகவும் இது அவரது தனிப்பட்ட சாதனை என்றும் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் கார் ரேஸில் முதல் தகுதி சுற்றில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்