இதையடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நேர்காணல்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அப்படி அவர் அளித்த ஒரு நேர்காணலில் “ இப்போது எல்லோரிடமும் சென்று மைக்கை நீட்டி கருத்துக் கேட்கிறார்கள். ஆனால் அந்த நபருக்கு அந்த விஷயத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதியானவரா எனப் பார்ப்பதில்லை. இது சம்மந்தமாக ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.