நயன்தாராவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (10:50 IST)
தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் அந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது அவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகிவரும் ’நெற்றிக்கண்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’, விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் 
 
மேலும் நயன்தாரா ஒரு மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் குஞ்சாக்கோ கோபன் என்பவர் நாயகனாக நடித்து வருகிறார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்
 
தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’நிழல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது பெற்ற எடிட்டர் அப்பு என்.பட்டாதிரி என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்