காதலர் மற்றும் நண்பர்களுடன் உல்லாசமாக தீபாவளியை கொண்டாடிய நயன்தாரா!

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (11:21 IST)

தீபாவளி பண்டிகையை பொது மக்கள் தங்கள் சொந்த பந்தங்களுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பட்டாசுகளை வெடித்து இனிப்புகள் சுவைத்து மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதேபோல் திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது காதலி நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சிவகார்த்திகேயன், நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மற்றும் திரைஉலகினர் இணைந்து  தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இந்த புகைப்படங்களை அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்