இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் நேற்றைய தீபாவளி தினத்தில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக டெல்லியிலும் காற்று மாசு குறைந்துள்ளதாகவும், சென்னையில் கடந்த ஆண்டு 255 என்ற அளவில் மாசு பதிவான நிலையில் நேற்று வெறும் 33 அளவே பதிவாகியுள்ளதாகவும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவால் காற்றின் மாசு பலமடங்கு குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.