நடிகர் விஜய், சன் பிக்சர்ஸ் மீது வழக்கு - அமைச்சர் சண்முகம் அறிவிப்பு

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (11:10 IST)
சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய வகையிலான காட்சிகள் இருப்பதாகவும், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், 'சர்கார் படத்தில் சில தேவையில்லாத காட்சிகள் சர்ச்சைக்கு உரிய  வகையில் வைத்துள்ளார்கள். இந்தக் காட்சிகளை உடனடியாக நீக்கவேண்டும்.
 
மேலும் சர்கார் படம் குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். ஆலோசனைக்குப் பிறகு சர்கார் மீது வழக்குப் பதிவது குறித்து முடிவெடுக்கப்படும். சர்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ், நடிகர் விஜய், தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதியப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்