நயன்தாராவின் தவறுகளை சொல்ல வருகிறதா தேவி...?

Webdunia
சனி, 9 ஜூலை 2016 (10:18 IST)
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவரும் தேவி படம் நயன்தாராவின் கதை என்று ஒரு தகவல் உலவுகிறது.


 


இந்தப் படத்துக்கு தமிழில் தேவி என்றும், இந்தியில் டெவில் என்றும், தெலுங்கில் நடிகை என பொருள்படும் அபிநேத்ரி என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இது நயன்தாராவின் கதை என்ற சந்தேகத்தை பல மாதங்கள் முன்பே நாம் எழுப்பியிருந்தோம்.
 
தேவி ஒரு பேய் கதை. இதில் தமன்னா இரு வேடங்களில் வருகிறார். அதாவது அக்கா, தங்கை. அதில் அக்கா பேயாகவும், தங்கை நடிகையாகவும் வருகிறார். 
 
பிரபுதேவா காதலிக்கும் தங்கையின் வண்டவாளங்களை பிரபுதேவாவிடம் போட்டுக் கொடுப்பது பேயாக வரும் அக்காதானாம். இந்த கதையை கூட்டி வாசித்தால் நயன்தாராவின் கதை போலிருப்பதால் படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. 
 
படம் வரட்டும்... பார்ப்போம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்