தெறியின் வெற்றிக்குப் பிறகு அனைவரும் விரும்பும் இயக்குனராகியிருக்கிறார் அட்லி. அடுத்து அவர் யாரை வைத்து படம் செய்வார் என்பது இன்றைய தேதியில் மில்லியன் டாலர் கேள்வி.
தெறி படப்பிடிப்பில் இருக்கையில் மகேஷ்பாபுவை சந்தித்து அட்லி கதை சொன்னார். அதனால், மகேஷ்பாபு படத்தை இயக்குவார் என்றனர். தெறியின் வெற்றிக்குப் பிறகு, விஜய் மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்க விரும்புகிறார். அதனால், பரதன் இயக்கத்தில் நடிக்கும் படம் முடிந்ததும் மீண்டும் அவர் அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்றனர்.
ஆனால், சமீபத்திய செய்தி, அட்லி அஜித்தை இயக்குகிறார். அட்லியின் தந்தைதான் அஜித்தின் ஆடிட்டர். அந்த பந்தம்தான் அட்லி அஜித்தை இயக்கப் போவதற்கு காரணம் எனவும் கூறுகிறார்கள்.