கான் நடிகர்களின் மௌனம் ஏன்? நஸ்ருதீன் ஷா விளக்கம்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (10:21 IST)
இந்தியாவில் இப்போது அரசுக்கு ஆதரவாக படங்கள் எடுக்க கலைஞர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை மூத்த நடிகர் நஸ்ருதீன் ஷா வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் நஸ்ருதீன் ஷா. இவர் தி வெட்னஸ் டே( தமிழில் கமல் நடித்த உன்னைப் போல் ஒருவன்). ஹேராம், கிரிஸ் உள்ளிட்ட பல பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியாவில் உருவாகி வரும் இந்துத்வா அரசியலுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி இருப்பதைக் கொண்டாடும் முஸ்லீம்களையும் கடுமையாகக் கண்டித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் ‘அரசாங்கத்திற்கு ஆதரவான திரைப்படங்களை உருவாக்க கலைஞர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். அதற்காக நிதி உதவியும் அவர்களுக்குக் கிடைக்கிறது. இதுபோன்ற படங்கள் அடிக்கடி வருகின்றன. நடிகர்கள் தங்கள் மனதில் பட்டதை பேசுவதற்காகத் துன்புறுத்தப்படுகின்றனர். இந்த நிலைமை ’கான்’ சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கும் உள்ளது. அவர்களுக்கு இழப்பதற்கு நிறைய இருக்கிறது. அதனால் அவர்கள் பேச தயங்குகிறார்கள்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்