இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ரிலீஸான கீர்த்தி சுரேஷ் படம்

Webdunia
புதன், 9 மே 2018 (15:20 IST)
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ படத்தின் தெலுங்கு வெர்ஷன், இன்று ரிலீஸாகியுள்ளது.

 
 
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இந்தப் படம், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. ‘மகாநடி’ என்றால் மிகப்பெரிய நடிகை என அர்த்தம். தமிழில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 11) ரிலீஸாகும் இந்தப் படம், தெலுங்கில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக இன்றே ரிலீஸாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்