இந்த நிலையில் இன்று தெலுங்கில் வெளியாகியுள்ள 'மகாநதி' படத்திற்கு இயக்குனர் அட்லி பாராட்டு தெரிவித்துள்ளார். மகாநதி திரைப்படம் சாவித்ரி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒரு அருமையான திரைப்படம் என்றும், அவரது கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் மிக பொருத்தமாக இருப்பதாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக மாயாபஜார் படத்தின் பாடலுக்கு சூப்பர் நடனம் என்று பாராட்டியுள்ளார்.
இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்த சமந்தா குறித்து அட்லி கூறியபோது, 'தம்பி சமந்தா, நீங்கள் சூப்பராக நடித்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் அட்லி தெரிவித்துள்ளார்.