22 வயதில் துருவங்கள் 16' என்ற வெற்றி படத்தை இயக்கி சாதனை படைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் தற்போது அரவிந்தசாமி நடிப்பில் உருவான 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள மூன்றாவது படம் குறித்த தகவலை அவர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு 'நாடக மேடை' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
'நாடக மேடை' படத்தை இயக்குவது மட்டுமின்றி கார்த்திக் நரேன் தனது சொந்த நிறுவனமான 'நைட் நாஸ்டாலோஜியா' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார். இந்த படம் இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவலை இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கவிருப்பதாகவும் கார்த்திக்நரேன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.,