வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’… வெளியான சூப்பர் எக்ஸைட்டிங் தகவல்!

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (08:45 IST)
வடிவேலு பல ஆண்டுகளுக்குப் பிறகு கதாநாயகனாக நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ‘ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்மந்தமான அறிவிப்பை லைகா வெளியிட்டது.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. சென்னை, மைசூர் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பில் வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் நடித்து முடித்துள்ளனர். கடைசியாக படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துரிதமாக நடந்து விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக வடிவேலுவை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களின் ஏக்கம் வெகுவிரையில் தீரும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் ப்ரமோஷனாக படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடல் இந்த மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாடலில் வடிவேலுவின் நடனக் காட்சிகள் சிறப்பாக பேசப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்