நாய்சேகர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (19:01 IST)
சதீஷ் நடித்த நாய் சேகர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் சிங்கிள் பாடல் ஏற்கனவே ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது
 
லொள் லொள் அரசன் என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் அஜேஷ் கம்போஸ் செய்திருக்கிறார் என்பதும் பாபா சேகல் என்பவர் பாடியுள்ளார் என்பதும்,  இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சதீஷ் ஜோடியாக பவித்ரா லட்சுமி நடித்திருக்கும் இந்த படத்தில் ஜார்ஜ் மரியான், ஞானசம்பந்தம், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்