நாய்க்கு டப்பிங் பேசிய மிர்ச்சி சிவா!

திங்கள், 3 ஜனவரி 2022 (15:22 IST)
சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் நாய் சேகர் படத்துக்கு சிவா ஒரு முக்கியமான உதவியை செய்துள்ளார்.

பிரபல காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமான நாய் சேகர் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. படத்தில் சதீஷுக்கு இணையான வேடத்தில் லாப்ரடார் நாய் ஒன்று நடித்துள்ளது.

அந்த் நாய் பேசுவது போன்ற சில காட்சிகள் படத்தில் வருகிறதாம். அந்த காட்சிகளுக்கு நடிகர் மிர்ச்சி சிவாதான் டப்பிங் பேசியுள்ளாராம். இதை குறிப்பிட்டு சதீஷ் சிவாவுக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்