நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட லைகா!

புதன், 16 மார்ச் 2022 (16:54 IST)
வடிவேலு நடிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை தயாரித்து வருகிறது லைகா நிறுவனம்

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் வடிவேலு மற்றும் நாய்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழுவினர் இப்போது மைசூர் அரண்மணைக்கு சென்று முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கதைப்படி வடிவேலு மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதால் மாளிகை போன்ற அரண்மணையை அவரின் வீடுபோல காட்டி படமாக்க உள்ளதாக சொல்லப்பட்டது.


அதை உறுதிப்படுத்துவது போல லைகா நிறுவனம் தற்போது மைசூர் அரண்மனையில் வடிவேலு மற்றும் படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு முக்கியமானக் காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்