ஜனநாயகன் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய அஜித் படத் தயாரிப்பாளர்!

vinoth

புதன், 15 அக்டோபர் 2025 (09:49 IST)
முழுநேர அரசியல்வாதியாகியுள்ள விஜய் தற்போது ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படம் ரிலீஸானதும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் பெரும்பாலானக் காட்சிகள் சென்னை பனையூரில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைத் தமிழகத்தில் கைப்பற்ற பெரிய போட்டி நடப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை சினிமா பத்திரிக்கையாளர் ஜெ பிஸ்மி வெளியிட்டுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அடுத்து அஜித் நடிக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்