நான் ராமராஜனுக்காகதான் அந்தக் கதையை எழுதினேன்… பல வருடங்கள் கழித்து மிஷ்கின் பகிர்ந்த தகவல்!

vinoth

புதன், 29 அக்டோபர் 2025 (14:07 IST)
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே மற்றும் நந்தலாலா உள்ளிட்ட பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மிஷ்கின் இயக்கிய படம் ஒன்று ரிலீஸாகி கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் இயக்கிய பிசாசு 2 மற்றும் டிரைன் ஆகிய படங்கள் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளன. இதற்கிடையில் மிஷ்கின் நடிகராக அறிமுகமாகி நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறார். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவர்களில் ஒருவராகப் பணியாற்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் மிஷ்கின் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய சினிமா வாழ்க்கைக் குறித்த சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் இயக்கிய யுத்தம் செய் படத்தில் முதலில் ராமராஜனைதான் நடிக்கவைக்க ஆசைப்பட்டேன். என்னுடைய உதவி இயக்குனர்கள், தயாரிப்பாளர் எல்லாம் வேண்டாம் என்றார்கள். மதுரை போன்ற ஒரு ஊரில் இருந்து நல்ல அறிவோடு ஆங்கிலம் எல்லாம் பேசத்தெரியாத ஒரு CID அதிகாரியாக இருந்தால் என்ன எனக் கேட்டேன். ஆனால் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர்தான் சேரன் என்று சொன்னதும் ஒத்துக்கொண்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்