சமீபகாலமாக நடிகர் விஷாலின் திரைவாழ்க்கையை அதிகளவில் பின்னடைவை சந்தித்து வருகிறது. அவர் நடிப்பில் சமீபத்தில் மார்க் ஆண்டனி மற்றும் மத கஜ ராஜா ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. அதே போல அவர் உடல்நிலைக் குறித்தும் பொதுவெளியில் பல சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் விஷாலின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அவர் நடிகை சாய் தன்ஷிகாவைத் திருமணம் செய்யவுள்ளர்.
அதையடுத்து தற்போது ரவி அரசு இயக்கத்தில் மகுடம் என்ற படத்திலும் மூன்று விதமான கெட்டப்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் எந்த தாமதமும் இன்றி சுறுசுறுப்பாகக் கலந்துகொள்வதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை முடித்ததும் அவர் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.