அண்ணாத்த 500 கோடி ரூபாய் வசூல் செய்யவேண்டும்… மிஷ்கின் வாழ்த்து!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (17:39 IST)
இயக்குனர் மிஷ்கின் அண்ணாத்த திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்யவேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொந்தமாக தாங்களே சில பல கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து படத்தை வெளியிடுகிறது. தீபாவளியை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் படம் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் நல்ல விமர்சனங்களை சந்தித்த அண்ணாத்த அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்மறை விமர்சனங்கள் வர் ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் அண்ணாத்த திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்யவேண்டும் என கூறியுள்ளார். அதில் ‘ரஜினிகாந்தின் மிகப்பெரிய காதலன். மக்களின் சுவைக்காக, சிரிப்புக்காக 45 ஆண்டுகாலம் திரையுலக வாழ்க்கையைக் கொடுத்துள்ளார். அவர் இன்னும் 50 ஆண்டுகள் வாழவேண்டும். அண்ணாத்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 500 கோடி ரூபாய் வசூல் செய்யவேண்டும். அதற்காக இயற்கையை வேண்டிக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்