டி-20 உலக கோப்பை: இந்திய அணி அபார வெற்றி...

புதன், 3 நவம்பர் 2021 (23:27 IST)
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய super 12  போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது  ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.
 
.இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு  எதிராக இந்திய அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்  பந்து வீச்சு தேர்வு செய்தது.  எனவே முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில்  2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் அடித்து, ஆப்கான் அணிக்கு 211 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த ஆப்கான் அணி 29 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தது. இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளில்( பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து) தோல்வியுற்ற நிலையில் இப்போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்