தொடங்குவதில் மீண்டும் தாமதம் ஆகும் மிஷ்கின் & விஜய் சேதுபதி படம்!

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (09:09 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். முக்கியமான ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவரின் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் போது விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக இப்போது இருவரும் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்த படம் பிப்ரவரியில் தொடங்கும் என சொல்லப்பட்டது.

ஆனால்  விஜய் சேதுபதி மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த படத்துக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் செப்டம்பரில் இந்த படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் தாமதம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்