யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி: விரைவில் அறிமுகம் என மத்திய அரசு தகவல்..!

வியாழன், 7 செப்டம்பர் 2023 (13:45 IST)
யுபிஐ மூலம் தற்போது பண பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் பணம் எடுக்கும் வசதி கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது 
 
யுபிஐ மூலம் ஏடிஎம்-இல் இருந்து பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் டெபிட் கார்டை பயன்படுத்தாமல் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் எடுக்க புதிய எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
தற்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் பணம் எடுக்கும் வசதி  ஒருசில வங்கிகளில் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் மூலம் டெபிட் கார்டை பயன்படுத்தாமல் கியூஆர் கோட் மூலம் மொபைல் போனிலிருந்து ஸ்கேன் செய்தால் பணம் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்