நான் தான் சிவகார்த்திகேயனுக்கு மெயின் வில்லன்: பிரபல இயக்குனர் பேட்டி!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (20:08 IST)
நான்தான் சிவகார்த்திகேயனுக்கு மெயின் வில்லன் என பிரபல இயக்குனர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் 
 
சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்களில் ஒன்று மாவீரன் என்பதும், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் மெயின் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்து வருவதாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். நான் மாவீரன் படத்தில் எம்எல்ஏ கேரக்டரில் நடிக்கின்றேன் என்றும், நான்தான் சிவகார்த்திகேயன் கேரக்டருக்கு முக்கிய வில்லன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
சிவகார்த்திகேயன் சிறப்பான நடிகர் மட்டுமின்றி அவர் நல்ல மனிதர் என்றும் எளிமையாக இருக்கிறார் என்றும் கண்டிப்பாக அவர் இந்திய அளவில் ஒரு நல்ல இடத்தை பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் மிஷ்கின் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்