இதையடுத்து, நீங்கள் முழு நேர அரசியலுக்கு வருவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலதித்த அவர், முழு நேர அரசியலுக்கு வருவது பற்றி என்னை நோக்கிக் கேட்கிறீர்களே... நீங்கள் முழு குடிமகனாகக் கூட இருப்பதில்லை. 40 சதவீதம் பேர் வாக்கு செலுத்தக் கூட வராமல் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள். முழு நேர அரசியல்வாதி என்று யாரும் கிடையாது என்று கூறினார்.
மேலும், விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், சினிமாவைவிட்டு முழு நேர அரசியலில் இறங்குவது அவர் விருப்பம்.அவர் செய்யும் சினிமா அவர் பாணி, நான் செய்யும் சினிமா என் பாணி. அவரவர்களுக்குப் பிடித்த விஸயத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். விஜய் அரசியலுக்கு நுழைந்ததும் முதல் வரவேற்பு என்னுடையதாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.