தங்கலான் படத்தின் பாடல்கள் பற்றி அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (10:49 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. இப்போது கோலார் தங்கவயலில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கால்டகிரன் நடிப்பதை படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பு போஸ்டரை வெளியிட இணையத்தில் கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது படத்துக்கு இசையமைத்து வரும் ஜி வி பிரகாஷ் படத்தின் பாடல்கள் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார். அதில் படத்துக்காக மூன்று பாடல்களை ஏற்கனவே முடித்துவிட்டதாகக் கூறியுள்ள அவர் விரைவில் மீதமுள்ள பாடல்களும் மெட்டமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். படத்தில் பழங்குடியினர் பற்றிய பாடல்கள் இடம்பெற்று இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பா ரஞ்சித்துடன் முதல் முறையாக ஜி வி பிரகாஷ் தங்கலான் படத்தின் மூலமாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்