''கோலி போல ஆகனுமா?'' இளம் வீரருக்கு அறிவுரை கூறிய பவுலிங் பயிற்சியாளர்

வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (16:28 IST)
விராட் கோலி போல ஆக  வேண்டுமென்றால் நீங்கள் நிறைய தியாகம் செய்ய வேண்டுமென்று இளம் வீரர் ஒருவருக்கு பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளர்.

டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி கடந்த 2008 ஆண்டு இந்திய இளையோர் அணி கிரிக்கெட்டிற்க தலைமையேற்று உலகக் கோப்பை வென்றார்.

அதன்பின்னர், சில மாதங்களில், இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்து இலங்கைக்கு எதிராக  களமிறங்கினார்.

இதையடுத்து, 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில்,இந்திய அணியில் இடம்பெற்றார்.

பின்னர், 2013 ஆம் ஆண்டு ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த அவர்,  தன் சிறந்த பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி, சதங்கள், மற்றும் அதிக ரன்கள் எடுத்தவராகவும் விளங்கினார்.

எனவே, தோனி 2014 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு, விராட்கோலி இந்திய அணியின் கேப்டன் ஆக பொறுப்பேற்று, 2020 வரை  இருந்தார்.

சிறந்த கேப்டன் என்று பெயரெடுத்த அவர், போன்று வர வேண்டும் என்பது இளம் வீரர்களுக்கு ஆசையுள்ளது.

இந்த நிலையில், இந்திய பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் ,’’இந்திய வீரர், முகமது சிராஜ் என்னிடம், கோலியின் தீவிர ரசிகர் என்பதால், பெங்களூர் அணிக்கான முதல் சீசன் விளையாடியதும், தான் கோலி போல் ஆக வேண்டுமென்று’’ என்று என்னிடம் கூறினார். ‘’அதற்கு நான் நீங்கள் நிறைய தியாகம் செய்ய வேண்டுமென்று’’ கூறியதாக தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்